Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதத்தை தடுக்க இந்தியாவில் நிரந்தர அமைப்பு - அதிரடி காட்டும் அமித்ஷா

பயங்கரவாத நிதி திரட்டலை தடுக்க இந்தியாவில் நிரந்தர செயலகம் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தடுக்க இந்தியாவில் நிரந்தர அமைப்பு - அதிரடி காட்டும் அமித்ஷா
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Nov 2022 7:52 PM IST

பயங்கரவாத நிதி திரட்டலை தடுக்க இந்தியாவில் நிரந்தர செயலகம் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பதற்கு எதிரான சர்வதேச நிலைப்பாடு என்ற கருப்பொருளின் அடிப்படையிலான 'பயங்கரவாதத்திற்கு நிதி கிடையாது' என்ற மாநாடு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 20 நாடுகளில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 450 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பயங்கர நிதி திரட்டலை தடுக்க இந்தியாவில் நிரந்தர செயலகம் உருவாக்கப்படும் என கூறினார். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பேசியதாவது, 'பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் இந்த நிகழ்வு சிறப்பு வாய்ப்பை உருவாக்கி உள்ளது. சுமார் 12 நாடுகளுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது பயங்கரவாதம் எப்போதும் திறனாய்வு, மனித உரிமை, பொருளாதாரம், முன்னேற்றம், உலக அமைதி ஆகியவற்றுக்கு எதிரானது' என பேசினார்.

மேலும் இளைஞர்களை கவர்தல், நிதி திரட்டுதல் போன்றவற்றில் பயங்கரவாதிகள் கைதேர்ந்துள்ளனர். அதே நேரத்தில் பயங்கரவாதத்தை பரப்புவதிலும் தங்கள் அடையாளங்களை வளர்த்துக் கொள்வதிலும் பயங்கரவாதிகள் 'டார்க் நெட்' என முறையை கையாண்டு வருகின்றனர் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் பேசினார்.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News