Kathir News
Begin typing your search above and press return to search.

வியட்நாமில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டிய தாகூரின் சிலை!

வியட்நாமில் ரவீந்திரநாத் தாகூர் சிலையை ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

வியட்நாமில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டிய தாகூரின் சிலை!
X

KarthigaBy : Karthiga

  |  16 Oct 2023 3:45 PM GMT

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நான்கு நாட்கள் பயணமாக நேற்று வியட்நாம் சென்றார்.அங்குள்ள பாக்நின் நகரில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை ஜெய்சங்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-


இந்தியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையே 2000 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க தொடர்பு இருக்கிறது. பலர் வியட்நாமில் புத்த மதத்தை பரப்பினர். தாகூரின் படைப்புகள் வியட்நாமில் பரவலாக அங்கீகரிக்கப்படுவதையும் படிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவரது படைப்புகள் வியட்நாம் பாட புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. தாகூரின் கீதாஞ்சலி வியட்னாமி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த 1929 ஆம் ஆண்டு தாகூர் வியட்னமுக்கு வந்துள்ளார். கடந்த 1982 ஆம் ஆண்டு தாகூர் நினைவாக நினைவு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். வியட்நாமில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் ஜெய்சங்கர் உரையாடினார். வியட்நாம் பயணத்தை தொடர்ந்து அவர் 19 மற்றும் 20 தேதிகளில் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் செய்கிறார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News