Kathir News
Begin typing your search above and press return to search.

19 ஆண்டுகள் தப்பி ஓடிக்கொண்டிருந்த சிமி தீவிரவாதி அப்துல்லா டேனிஷ் கைது!

19 ஆண்டுகள் தப்பி ஓடிக்கொண்டிருந்த சிமி தீவிரவாதி அப்துல்லா டேனிஷ் கைது!

19 ஆண்டுகள் தப்பி ஓடிக்கொண்டிருந்த சிமி தீவிரவாதி அப்துல்லா டேனிஷ் கைது!
X

Saffron MomBy : Saffron Mom

  |  7 Dec 2020 7:28 PM IST

19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த தடைசெய்யப்பட்ட இந்தியாவின் மாணவ இஸ்லாமிய அமைப்பின்(SIMI) 58 வயது பயங்கரவாதியான அப்துல்லா டேனிஷ் டெல்லி காவல்துறையால் ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். இவர் தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவர் மற்றும் 25 வருடங்களாக முஸ்லீம் இளைஞர்களைத் தீவிர மயமாக்குவதில் ஈடுபட்டு வந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2008-இல் அகமதாபாத்தில் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் நடத்திய குண்டு வெடிப்பில் இவர் தொடர்புடையவர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இளைஞர்களை ஒன்று திரட்டுவதிலும் டேனிஷ் ஈடுபட்டுள்ளார். இது போக இந்திய அரசு முஸ்லீம்களுக்கு எதிராக அட்டூழியங்கள் செய்துவருவதாகவும் பல தவறான குற்றச்சாட்டுகள் கொண்ட வீடியோக்களை பயன்படுத்தி வந்துள்ளார்.

9/11 நியூயார்க்கில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் சிமிக்கு தடைவிதித்தது. அதன்பிறகு, அந்த அமைப்பு டெல்லி ஜாமியா நகரில் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அதில் பலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் அப்துல்லா டேனிஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். 2001-இல் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுவரை கைது செய்வதற்காக டெல்லி காவல்துறை குழு அமைத்தது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை அறிக்கையின் படி, டேனிஷ் குடும்பத்தினர் முஸ்லீமாக மதமாற்றம் செய்து கொண்டுள்ளனர். இவர் 1988-இல் SIMI யின் இந்தி இதழின் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். நான்கு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் பல ஆத்திரமூட்டும் கட்டுரைகளை எழுதிவந்தார் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News