Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் சென்ற காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் நாடு திரும்பவில்லை! வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் சென்ற காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் நாடு திரும்பவில்லை! வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் சென்ற காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் நாடு திரும்பவில்லை! வெளியான அதிர்ச்சி தகவல்!

Muruganandham MBy : Muruganandham M

  |  9 Feb 2021 7:30 AM GMT

பாகிஸ்தான் சென்ற காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைப்பு அறிவித்தது. "அவர்கள் ஒருபோதும் திரும்பவில்லை" என்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி கூறினார். அவர்கள் பயங்கரவாத அமைப்புகளின் 'ஸ்லீப்பர் செல்' அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கக் கூடும் என்று கூறினார்.

"இந்த இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள், பின்னர் பயிற்சியளிக்கப்படுகிறார்கள் அல்லது இந்தியவிற்கு எதிராக விரோத பிரச்சாரத்தை மேற்கொள்வதில் ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய இளைஞர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவது எங்களுக்கு முன் ஒரு பெரிய சவால்" என்று அதிகாரி தெரிவித்தார்.

காஷ்மீர் இளைஞர்கள் குறுகிய காலத்திற்கு செல்லுபடியாகும் விசாக்களில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்திருந்தனர், ஆனால் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக திரும்பி வரவில்லை அல்லது காணாமல் போயுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சென்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் திரும்பிய பின்னர், அவர்களின் நடவடிக்கைகள் குறித்த சரியான பகுப்பாய்வு பாதுகாப்பு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் இளைஞர்களை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் அதிக கண்காணிப்புக் குழுவை ஒழுங்குபடுத்தி வைக்க முடியும் என்று அதிகாரி விளக்கினார்.

2020 ஏப்ரல் 1 முதல் 6 வரை, தெற்கு காஷ்மீரின் ஷோபியன், குல்கம் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் குழுக்களின் ஒரு பகுதியாகக் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் செல்லுபடியாகும் ஆவணங்களுடன் பாகிஸ்தானுக்கு பயணம் செய்திருந்தனர், அதன்பிறகு திரும்பி வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News