இனி புதிய மதரஸாக்களுக்கு அரசு மானியம் கிடையாது - யோகி அரசின் அதிரடி முடிவு
புதிய மதரசாக்களுக்கான மானியத்தை நிறுத்தம் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக்கொண்டது என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ANI நிறுவனம் செய்தி வெளியுட்டுள்ளது.

By : Mohan Raj
புதிய மதரசாக்களுக்கான மானியத்தை நிறுத்தம் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக்கொண்டது என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ANI நிறுவனம் செய்தி வெளியுட்டுள்ளது.
உத்திரப்பிரதேச அரசு 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மதரஸா நவீனமயமாக்கம் திட்டத்திற்கு 479 கோடி ரூபாய் ஒதுக்கியது, உத்திர பிரதேச மாநிலத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மதரஸாக்கள் உள்ளன. அவற்றை 155 மதரஸாக்களுக்கு அரசு மானிய உதவி கிடைக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள மதரசாக்களில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில அரசு தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு புதிய மதரஸாக்களை மானிய பட்டியலிலிருந்து விலக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச சிறுபான்மையினர் விவகார அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், 'மதரஸா மாணவர்கள் முழு தேசப்பற்றுடன் இருப்பதை அரசு வலியுறுத்துகிறது' என்றார், மேலும், 'சிறுபான்மையினருக்கு மார்க்க கல்வி அவசியம் அதேவேளையில் தேசிய கீதம் பாடும் போது மாணவர்களின் சமூக உணர்வு முக்கியம்' என்றார் அன்சாரி.
மேலும் அவர் கூறியதாவது, 'இப்போது மதரஸா மாணவர்கள் கணிதம் அறிவியல் மற்றும் கணினி மற்றும் சமய நூல்களையும் படிக்கிறார்கள்' என்றார்.
