Kathir News
Begin typing your search above and press return to search.

அதிரடி! டிக்டாக் உள்ளிட்ட 57 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை!

அதிரடி! டிக்டாக் உள்ளிட்ட 57 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை!

அதிரடி! டிக்டாக் உள்ளிட்ட 57 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை!

Saffron MomBy : Saffron Mom

  |  26 Jan 2021 1:03 PM GMT

சீன செயல்களான டிக்டாக், வி-சாட், பெய்டு, யூ சி பிரௌசர், கிளப் பாக்டரி, BIGO லைவ் போன்ற 59 சீன செயலிகளுக்கு நிரந்தரமாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இந்திய அரசாங்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த சீன செயலிகளுக்குத் தடை விதிக்க உத்தரவிட்டது இந்திய அரசாங்கம். மேலும் 2020 இறுதியில் 267 செயலிகளைக் கண்டறிந்து தடை செய்தது. மேலும் பிரபல விளையாட்டு செயலியான PUBG தென் கொரியாவின் விளையாட்டு நிறுவனம் கண்டறிந்தது என்றாலும் சீனா பங்குதாரராக இருப்பதால் அதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை முடிவானது இந்திய அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால்(MeiTY) சட்டம் 69A கீழ் எடுக்கப்பட்டது. மேலும் இந்த செயலியானது இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் அமைதியைச் சீர்குலைக்கும் என்றும் அது தெரிவித்ததது.
மேலும் அறிக்கையின் படி, இந்திய அரசாங்கம் இந்த நிறுவனங்களுக்கு ஜூன் இறுதியில் அளித்த நோட்டீஸ்க்கு அந்த நிறுவனம் சரியாகப் பதிலளிக்கவில்லை. அதனால் இந்தியா இந்த செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்து புதிய நோட்டீஸை அனுப்பியுள்ளது.
டிக்டாக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், நிறுவனம் நோட்டீஸ்கு மதிப்பீடு செய்து வருகின்றது மற்றும் அதற்கான பதிலை விரைவில் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், "ஜூன் 29 2020 இல் இந்தியா வெளியிட்ட அறிக்கைக்கு ஒத்துழைத்த நிறுவனங்களில் டிக்டாக் ஒன்றாகும். மேலும் அரசாங்கத்தின் சட்டங்களுக்கு மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட முயற்சி செய்துவருகிறோம், மேலும் அரசாங்கத்தின் கவலைகளைத் தீர்க்க முடிந்த வரை செயல்பட்டு வருகிறோம். எங்களின் முக்கிய முயற்சியாகப் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறோம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் பிரபல செயலிகளுக்குத் தடை விதித்த பின்னர் இது இந்தியச் செயலி உருவாக்குபவர்களுக்கு நிறைய இடத்தை இது வழிவகுத்தது. உதாரணமாகச் சீன செயலியான கேம்ஸ்கேனர் செயலிகலுக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்திய ஸ்கேனர் செயலியான காகஸ் ஸ்கேனர் செயலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும் சீனாவின் செயலிகளைத் தடைவிதிக்கப்பட்ட பின்னர், கூகுள், பேஸ்புக் செயலிகளும் தங்கள் சிறப்பு அம்சங்களாகக் குறுகிய வீடியோ எடுக்கும் பயன்பாட்டை தங்கள் செயலிகள் சிறப்பு அம்சங்களாகக் கொண்டுவந்தனர்.
மேலும் இந்திய அரசாங்கம் இந்தியாவில் உருவாக்கப்படும் மொபைல் செயலிகளுக்கு அனைத்து வகையிலும் டெவெலப்பர்களை ஊக்குவிக்கிறது. மேலும் ஜூலை 2020 இல் ஆத்மநிர்பார் செயலியை அறிமுகப் படுத்தியது. இது நாடுமுழுவதும் தனிப்பட்ட மற்றும் நிறுவனங்களிடம் இருந்து 7000 உள்ளீடுகள் கிடைத்தது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News