சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மாவோயிஸ்ட் சிவன்குட்டியுடன் மறுமணம்! திட்டமிட்டே நடக்கும் சதி!

By : Kathir Webdesk
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற கனக துர்காவை அவரது குடும்பத்தினரும், கணவரும் ஏற்காதவில்லை. அதனால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதனையடுத்து போராட்டத்தில் அவருடன் கலந்துகொண்ட சிவன்குட்டியும் மலப்புரத்தில் சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
சிவன்குட்டி, 1990களில் கேரளாவில் செயல்பட்டு வந்த அய்யன்காளி படை என்ற மாவோயிஸ்ட் ஆதரவுக் குழுவில் இருந்தவர். சிவன்குட்டி, அவரது அய்யன்காளி படை தோழர்கள் மண்ணூர் அஜயன், கல்லார பாபு மற்றும் கண்ணங்காடு ரமேஷ் ஆகியோர் 1996 அக்டோபர் 4 அன்று அப்போது நிறைவேற்றப்பட்ட கேரளப் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் டபிள்யூ.ஆர்.ரெட்டியை ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக பிணைக் கைதியாக வைத்திருந்தனர்.
INput From: Onindia
