அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா மறைவு! பிரதமர் மோடி இரங்கல்!
அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா மறைவு! பிரதமர் மோடி இரங்கல்!

By : Kathir Webdesk
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும் மருத்துவருமான சாந்தா இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

சென்னை அடையாறு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவமனை தலைவராக சாந்தா 20 ஆண்டுகள் இருந்துள்ளார். இவர் மருத்துவ சேவையில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சாந்தாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். புற்றுநோய்க்காக மேற்கொண்ட உயர்தர சிகிச்சைக்காக சாந்தா என்றும் நினைவு கூறப்படுவார். கடந்த 2018ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்ற புகைப்படங்களை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
