இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மலிவுக் கட்டணத்தில் இணைய வசதி - 86.37 % பகுதிகளை சென்றடைந்த தொலைத் தொடர்பு வசதி!
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மலிவுக் கட்டணத்தில் இணைய வசதி - 86.37 % பகுதிகளை சென்றடைந்த தொலைத் தொடர்பு வசதி!

2020ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி வரை, போன் இணைப்புகளின் எண்ணிக்கை 1171.72 மில்லியனாக அதிகரித்துள்ளது. இவற்றில் 1151.73 மில்லியன் செல்போன் இணைப்புகள். தொலைத் தொடர்பு வசதி 86.37 சதவீதப் பகுதிகளை சென்றடைந்துள்ளது. கிராமங்களில் தொலைத் தொடர்பு வசதி 58.85 சதவீதமாக உள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் இறுதி வரை, இணையம் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 776.45 மில்லியனாக உள்ளது. பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை 726.32 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை வயர்லெஸ் டேட்டா பயன்பாடு 75.21 எக்ஸாபைட்ஸ்களாக அதிகரித்துள்ளன. டேட்டா கட்டணமும் ஒரு ஜி.பி.க்கு ரூ.10.55 ஆகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக கோடிக்கணக்கானோர் இணைய இணைப்பு பெற்றுள்ளனர்.
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பணியாளர்கள் தானாக முன்வந்து ஓய்வு பெறும் வசதி, 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, கட்டிடங்கள் மற்றும் ஒலிபரப்பு கோபுரங்கள் மற்றும் இதர சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்டுதல், பத்திரங்கள் மூலமான கடன் திட்டம், பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் இணைப்பு போன்ற பல நடவடிக்கைகள் இந்த புதுப்பிக்கும் திட்டத்தில் உள்ளன.
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 92,956 ஊழியர்கள், கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் தானாக முன்வந்து ஒய்வு பெற்றனர். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சம்பள செலவு முறையே சுமார் 50 சதவீதம் குறைந்தது(தோரயமாக மாதத்துக்கு ரூ.600 கோடி), 75 சதவீதம் (மாதத்துக்கு ரூ.140 கோடி) குறைந்தது.
டிஜிட்டல் இந்தியா திட்ட இலக்கை அடைவதற்காக, பாரத் நெட் திட்டம் மூலம் கிராமப் பஞ்சாயத்துகளில் பிராட்பேண்ட் இணைப்பு திட்டத்தை (தோரயமாக 2.5 லட்சம் ஜிபிஎஸ்) மத்திய அரசு அமல்படுத்துகிறது. பாரத் நெட் திட்டம் மூலம் 1.50 லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்கள், ஏற்கனவே அதிகவேக இணைய இணைப்பு பெற்றுள்ளன.
கண்ணாடியிழை கேபிள் மூலம் அந்தமான் நிகோபார் தீவுகள் சென்னையுடன், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இணைக்கப்பட்டன. இந்த இணைப்புகள் மூலம் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.