Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கான் விவகாரம்: பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் !

ஆப்கான் விவகாரம்: பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் !
X

TamilVani BBy : TamilVani B

  |  7 Sept 2021 7:55 AM IST

ஆப்கான் பிரச்சனை குறித்து இந்திய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை.

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து தாலிபான்கள் ஆட்சி அமைக்க முயற்சிக்கள் மேற்கொண்டு வருகின்றனர். தாலிபான்களின் ஆட்சி அமைந்தால் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் அதிகரிக்கும் என பலர் கவலை தெரிவித்திருந்த நிலையில், தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்தால் இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்தும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட குழு ஆலோசனை நடைப்பெற்றது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Source: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News