Kathir News
Begin typing your search above and press return to search.

8 மாதங்களுக்கு பிறகு, கொரோனா தினசரி உயிரிழப்பு சடுதியாக குறைந்த சாதனை!

8 மாதங்களுக்கு பிறகு, கொரோனா தினசரி உயிரிழப்பு சடுதியாக குறைந்த சாதனை!

8 மாதங்களுக்கு பிறகு, கொரோனா தினசரி உயிரிழப்பு சடுதியாக குறைந்த சாதனை!

Muruganandham MBy : Muruganandham M

  |  19 Jan 2021 6:58 AM GMT

மைல்கல் சாதனையாக, இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட ஒரு கோடியைத் தாண்டியது.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,11,342-ஐத் தொட்டது. அதே நேரத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,08,012 ஆக உள்ளது. இரு பிரிவினருக்கு இடையேயான இடைவெளி 1,00,03,330 ஆக உள்ளது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 மடங்கு அதிகமாக உள்ளது.

தற்போது இந்தியாவில் குணமடைந்தோர் வீதம் 96.59 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 14,457 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 13,788 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 145 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தோரயமாக 8 மாதங்களுக்குப் பிறகு, இது மிகக் குறைவான அளவு. புதிதாக குணம் அடைந்தவர்களில், 71.70 சதவீதம் பேர், 7 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் ஒரே நாளில் 4,408 பேரும், மகாராஷ்டிராவில் 2,342 பேரும், கர்நாடகாவில் 855 பேரும் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 76.17 சதவீதம் பேர், 6 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

தினசரி கொவிட் பாதிப்பு அதிகபட்சமாக கேரளாவில் 5,005ஆக உள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் 3,081 பேருக்கும், கர்நாடகாவில் 745 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

Credit: PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News