விவசாய சட்டம்.. உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு என்ன சொல்கிறது.!
விவசாய சட்டம்.. உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு என்ன சொல்கிறது.!

புதியதாக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாரா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் டெல்லியில் கடந்த 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்பான பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மீது அதிருப்தியை பதிவு செய்தது உச்சநீதிமன்றம்.
வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயார் என்றால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாமாக முன்வந்து ஒரு முடிவை எடுக்காவிட்டால் நீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், புதிய வேளாண் சட்டத்தால் என்னென்ன நல்லது இருக்கிறது என யாரும் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லையே எனவும் சுட்டிக்காட்டினர்.