Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் நன்மைக்காகத்தான் வேளாண் சட்டம்.. பிரதமர் மோடி.!

விவசாயிகளின் நன்மைக்காகத்தான் வேளாண் சட்டம்.. பிரதமர் மோடி.!

விவசாயிகளின் நன்மைக்காகத்தான் வேளாண் சட்டம்.. பிரதமர் மோடி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2020 6:20 PM IST

விவசாயிகளின் நன்மைக்காகத்தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு புரியும் வகையில் பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

எப்ஐசிசிஐ அமைப்பின் 93வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: 20- 20 போட்டிகளில், தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், 2020ம் ஆண்டு அனைவரையும் தடுமாற செய்துள்ளது. இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் ஏற்ற இரக்கங்களை சந்தித்தது. சில ஆண்டுகள் கழித்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலத்தை நினைத்தால், அதனை நம்ப மாட்டோம். சூழ்நிலைகள் தொடர்ந்து மேம்படுவது நல்லதுதான்.

தொற்று உண்டான பிப்ரவரி மாதம், மார்ச் மாதத்தில், நாம் தெரியாத எதிரியுடன் போரிட்டு வந்தோம். உற்பத்தி போர் தளவாடங்கள், பொருளாதார மீட்சி என நிச்சயமற்ற தன்மை என ஏராளமான விஷயங்கள் உள்ளிட்ட நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது. இது எத்தனை நாள் நீடிக்கும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. ஆனால், டிசம்பர் மாதம் சூழ்நிலை மாறியது. அனைத்து கேள்விகளுக்கமான விடை கிடைத்தது. பொருளாதார சூழ்நிலை இன்று ஊக்கவிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிறகு, விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளும், தொழில்நுட்ப பலன்களும் கிடைக்கும். குளிர்பதன சேமிப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம், விவசாயத்துறையில் அதிக முதலீடு கிடைக்கும்.

இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். விவசாயிகள் மேம்பாட்டிற்காக வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News