வேளாண் கழிவு பொருட்கள் மூலம் இனி சாலைகள் - அமைச்சர் நிதின் கட்கரின் அசத்தலான அறிவிப்பு!
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் வேளாண் கழிவு பொருட்கள் மூலம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல்.
By : Bharathi Latha
மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் வேளாண்மை கண்காட்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அவர் உரையாற்றுகையில், மத்திய அரசுக்கு சொந்தமான 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருந்த விரைவில் நீக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கொள்கை முடிவு அனைத்து மாநிலங்களிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய அரசின் அரசின் கீழ் பயன்பாட்டில் உள்ள 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்படி நான் கையெழுத்து இட்டுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும் இதே கொள்கை அவர்கள் கடைபிடிக்க வேண்டும். ஹரியானாவில் உள்ள பானிபட்டில் நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் எத்தனால் தயாரிக்கும் ஆலை, வேளாண் கழிவுகளில் இருந்து நாள்தோறும் 15 டன் சாலை அமைப்பதற்கான தார் தயாரிக்கும் ஆலையை இந்தியன் ஆயில் நிறுவியுள்ளது.
எத்தனால் மற்றும் உயிரி பொருட்கள் மூலம் தார் தயாரிப்பதற்கு வைக்கோல் கழிவுப்பொருட்கள் மூலப்பொருட்களில் ஒன்றாக இருக்கும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் வேளாண் கழிவு பொருட்கள் மூலமே கிராமங்கள் முதல் நெடுஞ்சாலைகள் வரை சாலைகள் அமைக்கப்படுவது மகிழ்ச்சியான விஷயம் என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார். இனி இந்தியாவில் சாலை துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. வேளாண் கழிவு பொருட்களை பயன்படுத்தி இத்தகைய சாலைகள் அமைப்பதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக நாம் மாற்ற முடியும் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Vikatan News