100 கோடி இந்துக்களை அழித்தொழிக்க 15 நிமிடம் போதும் என்ற ஓவைசி! விடுதலை செய்து வேடிக்கை பார்க்கும் நீதிமன்றம்!
AIMIM leader Akbaruddin Owaisi acquitted in hate speech cases

By : Kathir Webdesk
ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி பெருநகர நீதிமன்றத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம், சர்ச்சைக்குரிய வழக்கில் இருந்து அக்பருதீன் ஒவைசியை விடுவித்ததுடன், தேசிய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் எந்த சர்ச்சைக்குரிய பேச்சுகளையும் செய்யக்கூடாது என்று அவருக்கு உத்தரவிட்டது.
2012 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்ததாக ஓவைசி மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ஹைதராபாத் நம்பாளி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. அவர் மீது 2012 ஆம் ஆண்டு நிர்மல் மற்றும் நிஜாமாபாத் ஆகிய இடங்களில் கிரிமினல் மற்றும் மதத்தின் அடிப்படையில் இரு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாக ஐபிசி விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
100 கோடி இந்துக்களை அழித்தொழிக்க, ராணுவத்தை 15 நிமிடம் செயல்படாமல் இருக்க வைகக வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு அக்பருதீன் ஓவைசி கடும் கொந்தளிப்பான உரையை நிகழ்த்தினார்.
இந்து தெய்வங்களை துஷ்பிரயோகம் செய்தார். வணங்குவதை அப்பட்டமாக கேலி செய்தார். இந்துக்களுக்கு பல கடவுள்கள் உள்ளனர், ஒவ்வொரு எட்டு நாட்களுக்கும் புதிய கடவுள்கள் வருகிறார்கள். எங்களுக்கு லட்சுமியை தெரியும், ஆனால் பாக்யலட்சுமி யார் என்று தெரியவில்லை" என்று சார்மினார் அருகே உள்ள பாக்யலட்சுமி கோவிலை குறிப்பிட்டு கூறியிருந்தார்.
வழக்கில் மொத்தம் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 33 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒவைசியும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
