Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க களமிறங்கும் விமானப்படை: பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க களமிறங்கும் விமானப்படை: பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 March 2022 7:39 AM GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இருந்த போதிலும் பயணிகள் விமானத்தில் குறைந்தளவே அழைத்து வர முடியும் என்பதால் தற்போது இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானத்தை களமிறக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சி17 விமானம் இந்தியர்களை அழைத்து வருவதற்காக உக்ரைன் பறக்க உள்ளது. இதனால் அனைவரையும் இந்திய விமானப்படை வீரர்கள் மீட்டு வருவார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் எழுந்துள்ளது. ஏற்கனவே ஆபரேஷன் கங்கா என்று உக்ரைனில் உள்ளவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பெயரிட்டு அதற்கான பணிகளில் முழு வீச்சில் செய்து வருகிறது.

தற்போது இதனை வேகப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி உத்தரவின்பேரில் இந்திய விமானப்படை இணைந்துள்ளது. சி17 விமானம் அதிகபட்சமாக 77500 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. எனவே விமானப்படை விமானத்தில் அதிகளவு இந்தியர்களை ஏற்றி தாயகம் அழைத்து வரலாம் என்று பிரதமர் மோடி எண்ணியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: The Diplomat

Next Story
கதிர் தொகுப்பு
Trending News