Kathir News
Begin typing your search above and press return to search.

பிபின் ராவத் மரணத்தை கொண்டாடுவதா: இஸ்லாம் மதத்திலிருந்து விலகி இந்து மதத்திற்கு மாறிய மலையாள இயக்குநர் அலி அக்பர்!

இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அ¬ந்தார். இதற்கு பல சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக கூறி மலையாள இயக்குநர் அலி அக்பர் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

பிபின் ராவத் மரணத்தை கொண்டாடுவதா: இஸ்லாம் மதத்திலிருந்து விலகி இந்து மதத்திற்கு மாறிய மலையாள இயக்குநர் அலி அக்பர்!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 Dec 2021 2:56 AM GMT

இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்தார் . இதற்கு பல சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக கூறி மலையாள இயக்குநர் அலி அக்பர் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் கடந்த 8ம் தேதி நடந்த கோரவிபத்தில் நமது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 13 பேர் வீரமரணம் அடைந்தனர்.இது பற்றிய சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளுக்கு ஒரு சிலர் சிரிப்பு (எமோஜியை) (ஸ்மைலி) பதிவு செய்து வருகின்றனர். அதிலும் இஸ்லாம் மதத்தில் இருப்பவர்களே அதிகம் பேர் இது போன்ற எமோஜியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்து பல கோடி பேர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது போன்ற செயலுக்கு கண்டனம் தெரிவிக்கின்ற வகையில் மலையாள இயக்குநர் அலி அக்பர், நேற்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறும்போது, நமது முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மரணம் தொடர்பாக வரும் செய்திகளுக்கு சிலர் மகிழ்ச்சியை தெரிவிக்கின்ற வகையில் சிரிப்பு எமோஜியை பதிவு செய்திருப்பதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற செயல்களுக்க எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காதது மிக கொடுமையான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே இது போன்றவற்றை பார்த்துக் கொண்டு இஸ்லாம் மதத்தில் இருப்பது நல்லது இல்லை. எனவே இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுகிறேன். எனது பிறப்பு மற்றும் என்னுடன் இருந்த அடையாளத்தை தூக்கி எறிகிறேன். எனது மனைவியும் இஸ்லாம் மதத்தை தூக்கி எறிகிறார்.

மேலும், என்னுடைய மகள்களை இந்த விவகாரத்தில் நான் எவ்வித நிர்பந்தமும் செய்யவில்லை, அவர்கள் விரும்பினால் மாறலாம் அல்லது அதிலே தொடரலாம் அவர்களின் விருப்பம் என்றார். இவ்வாறு அவர் தனது வீடியோவில் கடும் ஆவேசமாக கூறியுள்ளார். இவர் பேச்சுக்கு இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு எழுந்துள்ளது. ஒரு தேசத்தலைவன் நம்மை விட்டு பிரியும்போது அவர்களுக்கு ஆதரவாக ஒவ்வொரு இந்தியனும் பங்குபெறுவது கடமை ஆகும். அது மட்டுமின்றி அலி அக்பர் தற்போது இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும், தனது பெயரை ராமசிம்மன் என்று மாற்றிக்கொண்டதாக அவருக்கு மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவலை கூறுகின்றது. அலி அக்பர் ஏற்கனவே பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu Tamil

Image Courtesy: Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News