ஆப்கானிஸ்தான் நிலவரம் : இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு !
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானங்கள் மூலமா காபூலில் இருந்து 100க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
By : Thangavelu

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் பிரச்சனை மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கவும், விவாதிக்கவும் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது. இதற்காக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பரகலாத் ஜோஷி பங்கேற்கிறார்.
இக்கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலவரம் மற்றும் இந்தியா என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கும், தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இந்தியாவுக்கு என்ன சிக்கல்கள் வரும் உள்ளிட்டவைகளை வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் சிங்ளா விளக்கம் அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/26092704/All-Party-Meeting-Will-be-Held-Today-on-Afghanistan.vpf