Kathir News
Begin typing your search above and press return to search.

நசுக்கப்பட்டு வந்த பணியாளர்களுக்கும் அடையாளம் கொடுத்த பிரதமரின் திட்டம் : ஈ-ஷரம் தளத்தில் 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பதிவு!

All round efforts led by Union Minister Shri Bhupender Yadav yields huge success in registration at E-shram portal

நசுக்கப்பட்டு வந்த பணியாளர்களுக்கும் அடையாளம் கொடுத்த பிரதமரின் திட்டம் : ஈ-ஷரம் தளத்தில் 8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பதிவு!

MuruganandhamBy : Muruganandham

  |  23 Nov 2021 3:37 AM GMT

ஈ-ஷரம் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாராத் துறைகளை சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, அது தொடங்கப்பட்ட 12 வாரங்களில் சீராக அதிகரித்து வருகிறது

நவம்பர் 20,நிலவரப்படி, பதிவு தொடங்கி 12 வாரங்களுக்கு மேலான நிலையில், மொத்தம் 8,43,89,193 அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈ-ஷரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். அதற்கு முந்தைய நாளை விட இது 13,10,758 அதிகமாகும்.

ஆகஸ்ட் 24 முதல் நவம்பர் 16வரையிலான 12 வாரங்களில் பதிவுசெய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, விவசாயம், கட்டுமானம், ஆடைகள், ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்து மற்றும் வீட்டு மற்றும் வீட்டுப் பணியாளர்கள் முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ளனர்.

விவசாயம் (53.2%), கட்டுமானம் (12.1%), வீட்டுப் பணியாளர்கள் ( 8.8% ), ஆடை (6.3% ) மற்றும் மூலதன பொருட்கள் மற்றும் உற்பத்தி (3.3% ) என பதிவாகியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு விவசாயமே முக்கியத் தொழிலாகும்.

இ-ஷ்ரம் போர்ட்டல் பதிவுகளின் படி முதல் ஆறு வாரங்களில், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில், ஆண் தொழிலாளர்களின் பங்கு சற்று அதிகமாக இருந்தது (51% க்கும் அதிகமாக). இருப்பினும், கடந்த ஆறு வாரங்களில் ஆண் தொழிலாளர்களை விட பெண் தொழிலாளர்களின் பங்கு அதிகமாக உள்ளது.

பதிவுசெய்த முதல் வாரத்தில், பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில், சுமார் 5 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் சுமார் 2.7 லட்சம் பேர் பெண்கள். இது 12வது வாரத்தில் (நவம்பர் 10-16) ஆண்களுக்கு 3.8 கோடியாகவும், பெண்களுக்கு 4.05 கோடியாகவும் அதிகரித்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News