Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவும்.. முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!

கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள மாநிலங்களின் நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவும்.. முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 April 2021 5:21 PM IST

கொரோனா தொற்று பாதித்த மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.





அப்போது அவர் பேசும்போது: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும். மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறது.





மேலும், கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள மாநிலங்களின் நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தேவையான மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பூர்த்தி செய்வதில் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்த நாட்டில் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றினால், அனைத்து விதமான வளங்களும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News