Kathir News
Begin typing your search above and press return to search.

வேலை வாய்ப்பின்மை சதவீதத்தில் உச்சத்தை எட்டிய ராஜஸ்தான்!

வேலை வாய்ப்பின்மை சதவீதத்தில் உச்சத்தை எட்டிய ராஜஸ்தான்!

வேலை வாய்ப்பின்மை சதவீதத்தில் உச்சத்தை எட்டிய ராஜஸ்தான்!

Saffron MomBy : Saffron Mom

  |  21 Jan 2021 11:06 AM GMT

இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்(CMIE) வெளியிட்ட அறிக்கையின், ராஜஸ்தானில் வேலையில்லா சதவீதம் தொடர்ந்து டிசம்பர் 2020 போலவே ஜனவரி 2021 யிலும் 28.2 சதவீதமாக உச்சத்தைத் தொடுத்துள்ளது. இது நாட்டின் வேலையில்லா சதவீதம் 7.3 சதவீதத்திலிருந்து நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் வேலையில்லா மாநிலத்தில் ஹரியானவை தொடர்ந்து ராஜஸ்தான் 32.5 சதவீதமாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாகத் தேசிய வேலையின்மை சதவீதம் ஏப்ரல் 2020 இல் உச்சத்தை அடைந்தது. இருப்பினும் 10 மாதங்களுக்குப் பின்னரும் ராஜஸ்தானில் டிசம்பர் 2020 இல் வேலையில்லை சதவீதம் 28.2 சதவீதமாக இருந்தது.
ஏப்ரல் 2020 இல் தேசிய வேலையின்மை சதவீதத்தில் ஏற்ற இறக்கத்தைக் கண்டபோதிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த காலகட்டத்திலும் எந்தவித வேறுபாடுமின்றி காணப்பட்டது.
மார்ச் 2020 இல் தேசிய வேலையின்மை சதவீதம் 8.75 ஆக இருந்த பொழுது ராஜஸ்தானில் வேலையின்மை சதவீதம் 11.9 ஆக இருந்தது. ஏப்ரலில் 23.5 ஆகத் தேசிய சதவீதம் இருந்தபொழுது ராஜஸ்தானில் 17.7 ஆக இருந்தது. செப்டம்பர் 2020 இல் தேசிய சதவீதம் 6.68 ஆக இருந்த பொழுது ராஜஸ்தானில் 15.3 சதவீதமாக இருந்தது. மேலும் டிசம்பரில் தேசிய வேலையின்மை சதவீதம் 9.06 சதவீதமாக இருந்த பொழுது ராஜஸ்தானில் 28.2 சதவீதமாக இருந்தது.
மேலும் பொறுப்பற்ற காங்கிரஸ் அரசாங்கத்தையே பல அரசியல் வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றது. போக்குவரத்துக்கு துறையும் ஆளும் அரசாங்கத்தையே குற்றம்சாட்டுகின்றது. மேலும் அது 22 சதவீதம் தொழிலாளர்களை அதிகாரிகளைச் சுற்றுலா மற்றும் பட்டு போக்குவரத்தை ரத்து செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. "22 சதவீத தொழிலாளர்கள் சுற்றுலாத் துறையைச் சார்ந்துள்ளனர் மற்றும் 30சதவீத தொழிலாளர்கள் மாநிலத்தில் GDP யை சார்ந்துள்ளனர்.
இருப்பினும் இந்த துறைகள் மார்ச் மாதத்தில் மிகவும் சரிவடைந்தது, இருப்பினும் அரசாங்கம் இதனை உயர்த்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் வேலைவாய்ப்பின்மை சதவீதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றதது. எங்களுக்கு வாக்குறுதிகளை உறுதியாக அளித்திருந்தாலும் ஆனால் அதனை நிறைவேற்ற தவிறிவிட்டனர்," இந்திய ஹோட்டல் சங்கத்தின் தலைவர் ரந்திர் விக்ரம் சிங் தெரிவித்தார்.
மேலும் அவர் அண்டை மாநிலங்களான மத்தியப் பிரதேசத்தை ஒப்பிட்டு அவர்கள் படப்பிடிப்புக்கு நிதிகள் வழங்குகின்றன ஆனால் எல்லாம் இருக்கின்ற போதிலும் ராஜஸ்தான் அரசாங்கம் அதற்கான ஒரு முயற்சியும் மேற்கொள்ள வில்லை என்று குற்றம் சாட்டினார்.
மற்றொரு உரிமையாளர், "ராஜஸ்தான் சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் கைவினை பொருட்களைச் சார்ந்துள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் அது முற்றிலும் சரிவடைந்தது. தற்போதுவரை அந்த நிலையே தொடர்கின்றது. இதனாலேயே மாநிலத்தில் வேலையின்மை சதவீதம் அதிகரித்துள்ளது," என்று கூறினார்.
"மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வேலைக்கான அட்சேர்ப்புகள் நிலுவையில் உள்ளது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, 2.5 ஒப்பந்த தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகளும் நிலுவையில் உள்ளது. மேலும் சுய தொழில் செய்வதற்கான வாக்குறுதிகளையும் கண்டுகொள்ளவில்லை. இதுவே வேலைவாய்ப்பின்மை சதவீதம் உச்சத்தைத் தொடக் காரணமாகும்," என்று மாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்தார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News