Kathir News
Begin typing your search above and press return to search.

திருணாமுல் காங்கிரஸை அலறவைக்கும் அமித் ஷா!

திருணாமுல் காங்கிரஸை அலறவைக்கும் அமித் ஷா!

திருணாமுல் காங்கிரஸை அலறவைக்கும் அமித் ஷா!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  22 Dec 2020 5:42 PM GMT

மேற்கு வங்கத்தில் வரும் ஆண்டு மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. சென்ற 2 முறை கம்யூனிஸ்டுகளை வெகு சுலபமாக வீழ்த்திய மம்தாவுக்கு இந்த தேர்தலை பாஜக சிம்ம சொப்பனமாக மாற்றியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக வின் பிரம்மாண்டமான வளர்ச்சி அங்கு காங்கிரசையும், கம்யூனிஸ்டுகளயும் படு பாதாளத்தில் தள்ளியதுடன் மம்தாவின் வெற்றிக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு மற்ற கட்சிகளைப் போல அமைப்பு ரீதியான பலம் இல்லாவிட்டாலும் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 17 இடங்களைப் பிடித்தது. இது மம்தா கட்சியினரையும், பிற கட்சிகளையும் அலற வைத்தது.

மேலும் உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக பெற்ற அதிக இடங்கள் அக்கட்சிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்நிலையில் இந்த முறையாக ஆட்சியைப் பிடிக்க மம்தா பாஜகவுடன் போராடி வருகிறார், அதே சமயம்ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு திட்டமிட்டு பல செயல் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுகிறது.

இந்நிலையில் பாஜகவினர் மீது ஆத்திரம் அடைந்துள்ள மம்தா கட்சியினர் பாஜக தொண்டர்களை தொடர்ச்சியாக கொல்வதாக செய்திகள் வருகின்றன. இரு வாரங்களுக்கும் முன்னால் மேற்கு வங்கத்துக்கு பயணம் சென்ற பாஜக தேசீய தலைவர் ஜே.பி.நட்டா மீதே தாக்குதல் முயற்சிகள் நடந்தன.

இது பாஜக மேலிடத்தை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் அமித் ஷா கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக மேற்குவங்கம் சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

மிட்னாப்பூரில் பிரமாண்ட பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. ஒருவர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

இது மம்தாவுக்கு அளிக்கப்பட்ட பாடமாகவும், பதிலடியாகவும் பார்க்கப்படுகிறது. அமித்ஷா நடத்திய இந்த பேரணி மிகப் பிரம்மாண்ட பேரணி என்றும் இது வரை மேற்கு வங்கத்தில் இது போன்ற பேரணிகள் நடைபெற்றதில்லை என பத்திரிகைகள் வருணித்தன. இந்நிலையில் தானும் மிக பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தப்போவதாக மம்தா கூறியுள்ளார். பாஜகவை தாக்க திட்டமிட்டு தேர்தல் பிரச்சாரங்களை கையிலெடுக்க உள்ளார்.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி மாதம் மீண்டும் மேற்குவங்கம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மேற்குவங்க மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில் ‘‘விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதி அல்லது சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி சிறப்புக் கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளோம்.

சுபாஷ் சந்திரபோஸ் நூற்றாண்டு விழாவும் தொடங்கவுள்ளது. எனவே இதில் ஒரு நிகழ்ச்சிக்கு அமித் ஷாவை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.ஓரிரு நாட்களில் பயணத் திட்டம் இறுதி செய்யப்படும்’’ எனத் தெரிவித்தனர்.

அமித்ஷாவின் அடுத்த வருகையின் போது மம்தாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்னும் ஏராளமானோர் தங்கள் கட்சிக்கு வந்து இணைவார்கள் என்றும் கூறப்படுவது மம்தாவுக்கு மேலும் ஒரு கிலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News