Kathir News
Begin typing your search above and press return to search.

13 விவசாயத் தலைவர்களுடன் அமித் ஷா அவசர சந்திப்பு - பரபரப்பான கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.!

13 விவசாயத் தலைவர்களுடன் அமித் ஷா அவசர சந்திப்பு - பரபரப்பான கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.!

13 விவசாயத் தலைவர்களுடன் அமித் ஷா அவசர சந்திப்பு - பரபரப்பான கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.!

Muruganandham MBy : Muruganandham M

  |  9 Dec 2020 8:14 AM GMT

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயத் தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். ராகேஷ் டிக்கிட், குர்னம் சிங் சாதுனி, ஹன்னன் மொல்லா, சிவ்குமார் கக்காஜி, பல்பீர் சிங் ராஜேவால், ரால்டு சிங் மான்சா, மஞ்சீத் சிங் ராய், பூட்டா சிங் புர்ஜ்கில், ஹரிந்தர் சிங் லாகோவால், தர்ஷன் பால், குல்வந்த் சிங் சங்ஜுங், போத். தல்லேவால் ஆகியோர் கூட்டாக அமைச்சரை சந்தித்தனர்.

"அமித் ஷாவுடனான இந்த சந்திப்பு 8 மணிக்குத் தொடங்கியது. 13 விவசாயத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 8 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 5 பேர் நாட்டின் மற்ற விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இந்த சந்திப்பு அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெறும் என்று எண்ணியதாக சில விவசாயிகள்தெரிவித்தனர். ஆனால், பூசாவிலுள்ள தேசிய வேளாண் அறிவியல் கட்டடத்தில் நடைபெற்றது.

ஒருபுறம் நாளை 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது. மறுபுறம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த நிலையில் அமித் ஷா விவசாயிகளைச் சந்தித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 5 ம் தேதி, 5வது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர், விவசாயத் தலைவர்களுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடரும் என்று உறுதியளித்த அவர், மத்திய அரசின் விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேலும், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு சிந்திக்கும் என்று கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில், விவசாயிகளின் நலனை உறுதி செய்வதற்கான மோடி அரசாங்கத்தின் முன்முயற்சிகளை விளக்கிய அவர், விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களை ஒழிக்கும் எண்ணம் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.

போராட்டக்காரர்களிடையே இருந்த மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளை வீட்டிற்குச் செல்லுமாறு தோமர் விவசாயிகளின் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News