பிரதமர் முயற்சியினால் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ந்து வருகிறது: அமித்ஷா பெருமிதம்!
வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியின் பாதையில் செல்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் பெருமிதம்.
By : Bharathi Latha
மோடி முதல்முறையாக பிரதமரான பிறகு வடகிழக்கு மாநிலங்களில் அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்று உறுதி பூண்டார். அதன்படி தற்பொழுது வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறி இருக்கிறார். மேகாலயா மாநிலம் சில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கூட்டத்தில் உள்துறை அமைச்சர் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வடகிழக்கு மாநிலங்களையும், இன்று இருக்கும் வடகிழக்கு மாநிலங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், மோடி முதல் முறையாக பிரதமர் ஆன பிறகு வடகிழக்கு மாநிலங்கள் அமைதி மற்றும் வளர்ச்சி பாதையில் செல்கிறது என்பது உங்களுக்கு நிச்சயம் புரியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் சம்பவங்கள் 60% குறைந்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனை முன்னதாக ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல கூறுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போது யாரும் கோரிக்கையை வைக்க தேவையில்லை.
இரண்டு படிகள் முன்னின்று ரத்து செய்ததற்கான முயற்சிகளை அரசு எடுத்து வைத்திருக்கிறது. அருணாச்சல் பிரதேசத்தில் ஒரே ஒரு மாவட்டம் மட்டுமே ஆயுதப்படை சிறப்பு திட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளது. நாகலாந்தில் 7 மாவட்டங்களில் இருந்தும் திரிபுரா மற்றும் மேகாலயாவில் சிறப்பு படை ஆயுதப்படை சிறப்பு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar