அமிர்த பாரத் ரயில் நிலையத்திட்டம்: எதிர்காலத்திற்கு ஏற்ற நவீனமயமாக்கல்!
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் ரயில் நிலையங்கள் நவீனமயமாகப்பட உள்ளது.
By : Bharathi Latha
ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இத்திட்டம் வகைசெய்யும். ரயில்நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் பெருந்திட்டத்தை இது அடிப்படையாக கொண்டதாகும்.
குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும். ரயில் நிலையங்களில் ஏற்கனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக மேம்பாடும் மற்றும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாக கொண்டதாகும்.
தகவல் பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவை ரயில் நிலையங்களில் உறுதி செய்யப்படும். பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்தகைய பல்வேறு வசதிகளை ரயில் நிலையங்களின் செய்து தருவதன் மூலமாக நவீனமயமாக்குதல் என்ற அரசு இலட்சியத்தை அடைவதற்கு உதவி செய்து வருகிறது.
Input & Image courtesy: PIB News