ஐந்தாண்டு காலத்திற்கு மழலையர் பள்ளி உபகரணப் பெட்டி திட்டத்திற்கு ரூ.579.20 கோடி - குழந்தைகள் சேர்க்கையை அதிகரிக்க பிளான்!
By : Kathir Webdesk
அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 திறன் இயக்கத்தின் கீழ், மழலைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி/பள்ளிக்கு முந்தைய உபகரணப் பெட்டிகள் திட்டத்திற்கு 2021 – 2022 முதல் 2025 -26 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.579.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3 முதல் 6 வயது வரையிலான பிரிவில் 3.03 கோடி குழந்தைகள் அங்கன்வாடி மையங்கள் மூலம் மழலைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு முந்தைய மழலையர் பள்ளிகளில் கற்பித்தல் மூலம், பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை தயார்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விளையாட்டு அடிப்படையிலான பயிற்சி, குழந்தைகளுக்கு பிடித்த அணுகுமுறை மேம்பாடு ஆகியவை இத்திட்டத்திற்காக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி, சுகாதாரம், எந்திர மேம்பாடு, மொழி மேம்பாடு, படைப்பாற்றல் திறன் ஆகியவையும் இதில் அடங்கும். நாடு முழுவதும் இது குறித்து ஆய்வு நடத்தி மாதிரி நடவடிக்கைப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி அவற்றை வலுப்படுத்த வகை செய்கிறது. உயர்தரமான உள்கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள், நன்கு பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியவை கற்பித்தல் சூழலை மேம்படுத்தும்.
Input From: ICDS