Kathir News
Begin typing your search above and press return to search.

தொடரும் இந்து கோவிலில் சிலைகள் மீதான தாக்குதல்கள் - நடவடிக்கை எடுக்குமா ஆந்திர அரசு!

தொடரும் இந்து கோவிலில் சிலைகள் மீதான தாக்குதல்கள் - நடவடிக்கை எடுக்குமா ஆந்திர அரசு!

தொடரும் இந்து கோவிலில் சிலைகள் மீதான தாக்குதல்கள் - நடவடிக்கை எடுக்குமா ஆந்திர அரசு!

Saffron MomBy : Saffron Mom

  |  4 Jan 2021 12:56 PM GMT

சில நாட்களுக்கே முன்பே ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இந்து கோவிலில் கடவுள் ராமர் மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் சிலைகள் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு சம்பவமும் வெளிவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் சீதாராம் கோவிலில் கடவுள் சீதாவின் சிலை சூறையாடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடந்ததை அடுத்து, பா.ஜ.க மற்றும் TDP உறுப்பினர்கள் மாநிலத்தில் இந்து கோவிலை அடைந்து போராட்டம் நடத்தத் தொடங்கினர். அதனை அடுத்து காவல்துறை சம்பவம் நடந்த இடத்தை அடைந்து விசாரணையைத் தொடங்கியது.

மேலும் முதற்கட்ட விசாரணையில், கோவில் கண்காணிப்பாளர் கோட்டேஸ்வரம்மாவிடம் உரையாடி மற்றும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று போராட்டக்காரர்களுக்கு DGP விக்ராந்த் பட்டில் உறுதி அளித்தார்.

மேலும் சந்தேகிக்கும் நடமாட்டம் குறித்தும் உள்ளூர் வாசிகளிடமும் பேசினர். மேலும் இந்த சம்பவம் குறித்து அனைத்து நிலைகளிலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்துப் பேசிய பா.ஜகவின் தேசிய செயலாளர் சுனில் தியோதர், "இது போன்று இந்து சிலைகள் சூறையாடப்படுவதற்கு YS ஜெகன்மோகன் ரெட்டி மௌனம் காப்பது ஏன்.

இந்து தலைவர்களும் இதற்கு மௌனம் காத்து வருகின்றனர். மக்கள் இதனை சும்மா விடமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியாத?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு,இந்த சம்பவங்களுக்கு CBI விசாரணைக்குக் கோரி, ஜெகன்மோகன் ரெட்டி ஏன் சேதமடைந்த இந்து கோவில்களுக்குச் சென்று காணவில்லை என்று விமர்சித்தார்.

இந்து கோவில்களைச் சேதம் செய்வது தொடர்ந்து ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்து கொண்டே இருக்கின்றது. கடந்த மாதம் விஜயநகரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற 400 வருடம் பழமையான கடவுள் ராமர் சிலை இழிவுபடுத்தப்பட்டது. கோவில் பூசாரி கோவிலைச் சென்று பார்த்தபொழுது சிலை உடைந்திருந்தது.

ஜனவரி 1 இல் ராஜமுந்திரி மாவட்டத்தில் விக்னேஸ்வர கோவில் கடவுள் சுப்பிரமணிய சுவாமியின் சிலை இழிவுபடுத்தப்பட்டது. கோவில் பூசாரி கடவுளின் சிலை இரண்டு துண்டாக உடைக்கப்பட்டு காலால் மிதிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News