திருப்பதி தேவஸ்தான நிதியில் கை வைக்கும் ஜெகன்மோகன் ரெட்டி! அடுத்த இந்து சமய அறநிலையத்துறையாகிறதா ஆந்திர அரசு?
திருப்பதி தேவஸ்தான நிதியில் கை வைக்கும் ஜெகன்மோகன் ரெட்டி
By : Muruganandham
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதிகளை அரசின் செலவினங்களுக்கு பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், முடி காணிக்கை வருமானம் மற்றும் அளிக்கும் நன்கொடைகள் தேவஸ்தானத்துக்கு வருவாயை ஈட்டித் தருகிறது. இப்பணத்தை தேவஸ்தான அறக்கட்டளைகளின் பெயரில் வங்கியில் வரவு வைத்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் வளா்ச்சிப் பணிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், திருப்பதி புறவழிச் சாலையிலிருந்து திருப்பதி மலையடிவாரமான அலிபிரிக்கு நேரடியாகச் செல்ல நகராட்சி கருடாவாரதி என்ற பெயரில் மேம்பாலப் பணிகளை தொடக்கி நடத்திவருகிறது. இதற்கு தேவஸ்தானம் ரூ.458 கோடி அளிப்பதாக நகராட்சியிடம் தெரிவித்தது. தற்போது மேம்பாலப் பணிகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது. ரூ.684 கோடி மதிப்பிலான இந்திட்டம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் தொடங்கி வைக்கப்பட்டது.
தேவஸ்தானத்தின் நிதிகளை கோயில் திருப்பணிகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட இறைவழிபாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதைத் தவிா்த்து, அந்த நிதிகளை மேம்பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு பயன்படுத்தி வீணடிக்கக் கூடாது. மேலும், மேம்பாலம் கட்டுவது நகராட்சிக்கு உள்பட்ட பணி. அதற்கு தேவஸ்தானத்தின் நிதிகளை அளிக்கக் கூடாது என ஏற்கனவே தொடரப்பட்ட பொது நல வழக்கு ஆந்திர உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
திருப்பதி கோவிலுக்கு திருப்பணி செய்து வரும் பலருடைய குடும்பம் இன்னும் வறுமையில் வாடும் நிலையில், அதற்கான திட்டங்களை அறிவிக்காமல், கோவில் வருமானத்தை அரசு செலவினங்களுக்கு திருப்பிவிடும் வேலையை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு செய்து வருகிறது.
-