Kathir News
Begin typing your search above and press return to search.

கேராளவில் மேலும் ஒரு லவ் ஜிஹாத்: ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்ட சிறுமி?

கேராளவில் மேலும் ஒரு லவ் ஜிஹாத்: ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்ட சிறுமி?
X

ThangaveluBy : Thangavelu

  |  27 April 2022 5:46 PM IST

கேரளாவில் மேலும் ஒரு லவ் ஜிஹாத் சம்பவம் அரங்கேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் வசிப்பவர் மணக்கப்பறம்பு பிஜீ, இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் தொழிற்சங்க தலைவராக பதவி வகித்து வருகின்றார். இவருக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அவர் சமீபத்தில் 12ம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவனுடன் தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக மணக்கப்பறம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியும் அவர்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

சிறுமி காணாமல் போகும்போது தனது செல்போனை ஆப் செய்துள்ளார். கடைசியாக எர்ணாகுளத்தில் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு செல்போன் ஆன் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் வலுத்து வருகிறது. போலீசார் எர்ணாகுளத்தில் முகாமிட்டு அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் லவ் ஜிஹாத் எனவும், லவ் ஜிகாத் கும்பலுடன் சிறுமி பலியாகியதாக கூறப்படுகிறது. இது போன்று லல் ஜிகாத்திடம் மாட்டிக்கொள்ளும் சிறுமிகள் அதிகளவு சிரியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றனர். அங்கு கொண்டு சென்று பாலியல் தொழிலில் தள்ளிவிடும் வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. எனவே இது போன்ற நபர்களிடம் சிக்காமல் பெண்கள் தங்களின் படிப்புகள் மேல் மட்டும் கவனம் செலுத்தினால் பெற்றோர்களுக்கு நல்லது, சமுதாயத்திற்கும் நல்லது.

Source, Image Courtesy: Vijayabharatham

Next Story
கதிர் தொகுப்பு
Trending News