Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல், மன்மோகன்சிங் உணர்ச்சியற்றவர்களா? - ஒபாமா எழுதிய புத்தகத்தில் என்ன சொல்கிறார்.!

ராகுல், மன்மோகன்சிங் உணர்ச்சியற்றவர்களா? - ஒபாமா எழுதிய புத்தகத்தில் என்ன சொல்கிறார்.!

ராகுல், மன்மோகன்சிங் உணர்ச்சியற்றவர்களா? - ஒபாமா எழுதிய புத்தகத்தில் என்ன சொல்கிறார்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2020 1:53 PM IST

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா புதிதாக வெளியிடும் தனது அரசியல் நினைவுக் குறிப்பான ‘‘ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்’’ (The Promised Land) என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் பற்றி எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அமெரிக்காவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் பல தலைவர்கள் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார் என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

கடந்த 2009 முதல் 2017வரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். அப்போது அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா இருந்து வந்தார். இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் ஆகியோர்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

ஒபாமாவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி குறித்து கூறியுள்ளதாவது:

பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருவித உணர்ச்சியற்ற ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தி பற்றி கூறும் போது, ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர். ஒரு மாணவராக இருப்பதால், அவர் பாடங்களை செய்து ஆசிரியரைக் கவருவதற்கு ஆர்வமாக இருக்கிறார். ஆனால் ஆழமாக எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வம் அல்லது ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

ஒபாமா ஆட்சிக் காலத்தில், காங்கிரசின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த டிசம்பர் 2017ம் ஆண்டு ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது அவரை சந்தித்தார். ராகுல்காந்தி இந்த சந்திப்பு குறித்து ட்வீட் செய்திருந்தார். அவரை மீண்டும் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அதிபர் பாரக் ஒபாமா கிரேட் உடன் ஒரு அருமையான அரட்டை இருந்தது என ராகுல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News