15 மாதங்களில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் : இந்திய இராணுவத்திற்கு கேம் சேஞ்ரான திட்டம்!
By : Muruganandham
இந்திய ராணுவம் கடந்த 12 முதல் 15 மாதங்களில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான 118 கொள்முதல் ஒப்பந்தங்களை அதற்கு வழங்கப்பட்ட அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி முடித்துள்ளது என்று ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே கூறினார்.
கடந்த ஆண்டில், பாதுகாப்பு கையகப்படுத்துதல் நடைமுறையில் உள்ள விதிகளின் கீழ், சில விரைவான கொள்முதல்களை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் பாதுகாப்புத்துறைக்கு வழங்கப்பட்டன. வெறும் 12 முதல் 15 மாத காலப்பகுதியில், ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக இராணுவத் தளபதி கூறினார்.
இதற்கு முன்னர்வ் இவ்வளவு பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் ஒன்றரை ஆண்டுகளில் செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தங்களில் பெரும் பங்கு இந்திய பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத் தலைவர் தெரிவித்தார்.
இதில் பெரும்பாலானவை, உள்நாட்டு ஒப்பந்தங்களாகும். அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை MSMEக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
"இது எங்கள் உள்ளூர் தொழில்துறையை உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக MSMEக்கள் பாதுகாப்புத் துறையில் கால்பதிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது இது நிச்சயமாக ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று ஜெனரல் நரவனே மேலும் கூறினார்.
உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நெடுகிலும் பதட்டங்களுக்கு மத்தியில், அவசரகால செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, வேகமான கொள்முதல்களை மேற்கொள்ள, அரசாங்கம் கடந்த ஆண்டு மூன்று சேவைகளுக்கு அதிகாரங்களை வழங்கியது.
ஆயுதப்படைகளின் அவசரகால செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 300 கோடி ரூபாய் வரையிலான அவசர மூலதன கையகப்படுத்தலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.