Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை

திருச்செந்தூரில் வாடிக்கையாளர் போன்ற நகைக்கடைக்கு வந்த திமுக வார்டு செயலாளர், கவரிங் நகை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய காட்சி சி.சி.டி.வி'யில் பதிவாகியுள்ளது.

பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை

Mohan RajBy : Mohan Raj

  |  24 Aug 2022 2:04 PM GMT

சுகாதார மறுமலர்ச்சி அரசின் மிக முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆன்மீக குரு மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் ஹரியானாவின் பரிதாபாத் நகரில் ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாக அமிர்தா மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தலைமையில் முதலமைச்சர் மனோகர் லால் கர்த்தார், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய நரேந்திர மோடி பிரதமர்,' ஆன்மீகம் மற்றும் சமூக சேவை கவனம் செலுத்தி வரும் ஒரு நிறுவனம் இந்த மருத்துவமனை அமைத்திருப்பது பொதுமக்கள் தனியார் கூட்டுறவுக்கு மிகச்சிறந்த உதாரணம்' என தெரிவித்தார்.

நம் நாடு தற்போது கல்வியிலும், சுகாதாரத்திலும் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் ஆன்மீக குரு மாதா அமிர்ந்தானந்தமயி அவர்களின் இந்த சேவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பு என குறிப்பிட்டார்.


ஆசியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான அமிர்தா மருத்துவமனை 6000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது இங்கு 2006 படுகைகள் அமைந்துள்ளன எனது குறிப்பிடத்தக்கது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News