Kathir News
Begin typing your search above and press return to search.

மதமாற்றம்: இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக இரண்டு கிறிஸ்தவ மிஷனரிகள் கைது ! #Assam #Conversion

மதமாற்றம்: இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக இரண்டு கிறிஸ்தவ மிஷனரிகள் கைது ! #Assam #Conversion

Saffron MomBy : Saffron Mom

  |  27 Nov 2021 5:02 PM GMT

கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யும் பிரச்சாரத்தின்போது இந்து தர்மத்தை இழிவுபடுத்துவதாக இரண்டு பெண் மிஷனரிகளை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். பாஷா சாதிக் லைன், சில்ச்சர் என இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கிறிஸ்தவ மதத்தை பிரசங்கித்து கொண்டிருந்த இருவர் மீது உள்ளூர் இந்துக்கள் தாராபூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளின்படி, இந்து ராக்கி பாஹினி ( அதாவது ஹிந்து மதத்தை பாதுகாக்கும் ராணுவம்) என்ற அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர்கள் 4 மணி அளவில் நித்து கோலா மற்றும் ஷிர்ஷா பாகிடி என்ற என்ற தாராப்பூரை சேர்ந்த இரு நடுத்தர வயது பெண்களை தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் இருவரும் அம்பிளிபையர் மூலமாக பைபிள் வாசகங்களை ஒலிபரப்பிக் கொண்டு இருந்ததாகவும், கிறிஸ்தவத்திற்கு மதம் மாறும் படி துண்டுப்பிரசுரங்களை அளித்ததாகவும் கூறப்படுகிறது. தாராப்பூர் வெளிப்புற காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல் குழு இந்த இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.




'கிறிஸ்தவ மதமே உயர்ந்தது என்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினால் மட்டுமே மன அமைதி கிடைக்கும்' என்றெல்லாம் பிரசிங்கத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பூஜைகள் எல்லாம் தேவை இல்லை என்றும் இந்து மதத்தை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

" அவர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துகின்றனர். அவர்கள் ஒரு இந்து இடத்தில் இதுபோன்ற செய்ய முடியாது" என்று உள்ளூர் அமைப்பைச் சேர்ந்த பிஜோய் நாத் தெரிவித்தார். அவர்களிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "இது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு பெண்களையும் தடுத்து நிறுத்தி இந்த விஷயத்தை மேலும் விசாரித்து வருகிறோம்" என தெரிவித்தார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் கடந்த 20 வருடங்களாக தங்களுடைய மேலாதிக்க மதவெறியை நாடு முழுவதும் பரப்புவதற்கு அதிக அளவில் தைரியம் அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்து தர்மம் மற்றும் ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்துவது மற்றும் அவமதிப்பது போன்ற செயல்பாடுகள் பிரதான ஊடகங்களினால் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

ஆனால் சமூக ஊடகங்களின் வருகையுடன் அவர்களின் தவறான பிரச்சாரங்கள் தற்பொழுது சாதாரண இந்துக்களால் கூட கவனிக்கப்படுகின்றன. இது தொடர்பாக நாம் நிறைய செய்யவேண்டியுள்ளது. ஆனால் இந்துக்கள் உள்ளூர் மட்டங்களில் இப்படி வெளிநாட்டு உதவியுடன் மதமாற்றம் செய்பவர்களை எதிர்த்துப் போராடி வருகின்றன.

ஆர்எஸ்எஸ் உடன் எந்த தொடர்பும் இல்லாத பல புதிய இந்து அமைப்புகளும் உருவாகி வருகின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். இப்படிப்பட்டவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து இந்துக்கள் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு செயல்படுவதும் பாராட்டுக்குரியது. ஒருவர் உங்கள் மதம் மற்றும் தெய்வங்களை குறைத்து மதிப்பிட்டு அவமதித்தால் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பது எளிதல்ல. இத்தகைய மிஷனரிகள் முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளுக்குள் செல்லாமல் இருப்பது இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

சமூகத்தில் வெறுப்பை விதைக்கும் இத்தகைய மத மாற்றத்துக்கு எதிராக செயல்பட வேண்டியது மதசார்பற்ற அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் கையில் உள்ளது. உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய அவசியத் தேவையும் உள்ளது.

With inputs from: Hindu Post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News