அஸ்ஸாமில் தலிபான்கள் ஆட்சியா? செல்போன் கடைக்கு புர்கா அணியாமல் வந்த பெண்ணை அடித்து வெளியே அனுப்பிய கொடுமை!
assams-biswanath-district-burqa-incident-shamed-thrown-out-of-shop-for-wearing-jeans-not-burqa-says-assam-woman
By : Muruganandham
அஸ்ஸாமில் பர்தா அணியாமல் செல்போன் கடைக்கு வந்த பெண்ணை, அந்த கடைக்காரர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுகாத்தியில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் பிஸ்வநாத் சைராலி என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நூருல் அமீன் என்பவர் அங்கு செல்போன் கடை வைத்துள்ளார். அவருடைய கடைக்கு இஸ்லாமிய பெண் பர்தா அணியாமல் ஜீன்ஸ் அணிந்து வந்ததாக தெரிகிறது. அப்போது நூருல் அமீன் மற்றும் அங்கிருந்த 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி, கடைக்கு வெளியே தள்ளிவிட்டுள்ளனர்.
இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண், கடையில் நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய தந்தையிடம் சொல்லி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தையும், கடைக்கு வந்து நியாயம் கேட்டுள்ளார். ஆனால், கடை ஓனரும், மற்றவர்களும் சேர்ந்து, அவரையும் தாக்கி உள்ளனர்.
இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, எனது மகளை தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள். கண்மூடித்தனமாக தாக்கியும் இருக்கிறார்கள்.. அஸ்ஸாமில் தலிபான் முறையை கொண்டு வர பார்க்கிறார்கள்.. பெண்கள் பர்தா அணி வேண்டும், முகத்தை காட்டக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரின் தந்தையும் போலீசில் புகார் தெரிவிக்கவே நூருல் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.