Begin typing your search above and press return to search.
இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் ATAGS பீரங்கி - பரிசோதனை வெற்றி.!
இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் ATAGS பீரங்கி - பரிசோதனை வெற்றி.!

By : Bharathi Latha
இந்திய ராணுவத்தின் தரைப்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ATAGS பீரங்கி இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் தரைப்படையின் பயன்பாட்டிற்காக, ATAGS (Advanced towed Artillery Gun System) பீரங்கிகளை, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்(DRDO) வடிவமைத்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த பீரங்கிகள் தயாரிக்கப்படுகின்றன.

இதன் தாக்குதல் திறன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ATAGS பீரங்கி ஒடிசாவின் பாலசோர் சோதனை தளத்தில் இன்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் ATAGS திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

இது உலகின் மிகச் சிறந்த பீரங்கி என்றும், இதுபோன்ற பீரங்கி முறையை வேறு எந்த நாடும் உருவாக்கியதில்லை என்றும் அவர் கூறினார். இந்த பீரங்கி வடிவமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. விரைவில், இந்த துப்பாக்கி PSQR சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். பீரங்கித் துப்பாக்கி அமைப்பு தயாரிப்பில், இந்தியா மிகப்பெரிய சாதனையை அடையும் என நம்புவதாக DRDO அதிகாரி அனில் மார்கோகர் தெரிவித்தார்.
Next Story
