Kathir News
Begin typing your search above and press return to search.

இனிமேல் இரவு நேரங்களிலும் பிரேத பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு நேரங்களிலும் பிரேத பரிசோதனைகள் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நமது இந்தியாவில் விபத்துகள் மற்றும் தற்கொலை மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்களினால் மரணம் அடைபவர்களின் உடல்களை பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது.

இனிமேல் இரவு நேரங்களிலும் பிரேத பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Nov 2021 6:39 AM GMT

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு நேரங்களிலும் பிரேத பரிசோதனைகள் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நமது இந்தியாவில் விபத்துகள் மற்றும் தற்கொலை மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்களினால் மரணம் அடைபவர்களின் உடல்களை பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது.

இதற்கு சில காரணங்களும் சொல்லப்பட்டது. இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கு சரியான டெக்னாலஜி வசதிகள் நம்மிடம் இல்லாமல் இருந்தது. இதனால் அனைத்து விதமான உடற் கூறாய்வுகள் பகல் நேரங்களில் மட்டுமே செய்யப்பட்டது.

இந்நிலையில், பழைய நடைமுறையை மாற்றி சூரிய அஸ்தமனத்திற்கு பின்னும், பிரேத பரிசோதனைகளை செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடற்கூறாய்வு பகல் நேரமோ அல்லது இரவு நேரத்திலோ செய்யலாம். அனைத்து வகையிலான டெக்னாலஜி வந்து விட்டது. மேலும், தற்கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த நிலையில் இருக்கும் உடல்கள் உள்ளிட்டவைகளை இரவு நேரங்களில் உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அது போன்ற மரணங்களை பகலில் மட்டுமே உடற் கூறாய்வு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News