குணடையும் கொரோனா தொற்று: ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் அளித்த ஆந்திர அரசு.!
ஆந்திரா மாநிலம், கிருஷ்ணப்பட்டினம் என்ற ஊரில் வழங்கப்பட்டு வரும் ஆயுர்வேத மருந்துக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
By : Thangavelu
ஆந்திரா மாநிலம், கிருஷ்ணப்பட்டினம் என்ற ஊரில் வழங்கப்பட்டு வரும் ஆயுர்வேத மருந்துக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் பகுதியில் ஆனதய்யா என்பவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆயுர்வேத மருந்து தயார் செய்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார். இந்த மருந்தை வாங்குவதற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயரம் பேர் படையெடுத்து வந்தனர். இதனால் அந்த மருத்துக்கு ஆந்திராவில் தேவை அதிகரிக்க தொடங்கியது.
இந்த மருந்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் நிபுணர்கள் நடத்திய விசாரணையில், ஆனந்தய்யா தயாரித்து வழங்கி வரும் மருந்தில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஆந்திர அரசு ஆயுர்வேத மருந்தை தயாரித்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அம்மருந்தை வாங்க குவியும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.