Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் நன்கொடைக்குப் பங்களிக்கும் பாபர் மசூதி வழக்கறிஞர் இக்பால் அன்சாரி!

ராமர் கோவில் நன்கொடைக்குப் பங்களிக்கும் பாபர் மசூதி வழக்கறிஞர் இக்பால் அன்சாரி!

ராமர் கோவில் நன்கொடைக்குப் பங்களிக்கும் பாபர் மசூதி வழக்கறிஞர் இக்பால் அன்சாரி!

Saffron MomBy : Saffron Mom

  |  15 Jan 2021 7:08 PM GMT

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வெற்றிபெற்று தற்போது உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோவிலுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடிகள் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமூகத்தைச் சேர்ந்த ராம பக்தர்கள் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி திரட்ட பேரணிகளை நடத்தத் தொடங்கினர்.

தற்போது ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நிதி திரட்டுவதை ஆதரித்து இதுபோன்று அனைத்து மதங்களிடையே சகோதரத்துவத்தை உண்டாக்குவதில் இதுபோன்று மத உணர்வுகளுக்கு நன்கொடைகள் அளிப்பதில் தவறில்லை என்று பாபர் மசூதி வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் நொவ்க்கு உரையாடிய அவர், தானும் நன்கொடை வழங்குவதாகவும் மற்றும் மற்றவர்கள் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப நன்கொடை அளிக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார். அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோவிலுக்கு நிதிகளைத் திரட்டுவதற்காக அதிக மக்களிடம் பிரச்சாரத்தை இன்று முதல் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா தொடங்குகின்றது.

தேசிய அளவிலான பிரச்சாரத்தில் ராம பக்தர்கள் வழங்கும் கோடிக்கணக்கான தன்னார்வ பங்களிப்பால் ராமர் கோவில் கட்டப்படும் என்று அறக்கட்டளை தனது ட்விட்டில் முன்னர் தெரிவித்தது. மேலும் தன்னார்வத்தில் நன்கொடை பெறப்படும் மற்றும் முன்னரே நிதி திரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய்க்கான கூப்பன் அச்சடிக்கப்பட்டது.

முன்னர் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமர் கோவில் கட்டுமானத்திற்காகத் தனது பங்களிப்பாக 5,00,100 ரூபாய் வழங்கினார். மேலும் இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதியை விஷ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் அலோக் குமார், RSS தலைவர் குல்பூஷன் அஹுஜா, ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மற்றும் கோவில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோரும் சந்தித்தனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் 1 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News