Kathir News
Begin typing your search above and press return to search.

ட்விட்டரை தடை செய்.. என ட்விட்டரிலேயே ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.! #TwitterBaninIndia

ட்விட்டரை தடை செய்.. என ட்விட்டரிலேயே ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.! #TwitterBaninIndia

ட்விட்டரை தடை செய்.. என ட்விட்டரிலேயே ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.! #TwitterBaninIndia
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Nov 2020 9:08 PM IST

இந்திய பகுதியான லே பகுதியை வரைபடத்தில் தவறான காண்பித்த விவகாரத்தில் ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி இந்தியாவில் ட்விட்டரை தடை செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

சமூக வலைதளமான ட்விட்டரை உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், லாடக்கின் லே பகுதியை, சீனாவில் இருப்பது போன்ற வரைபடத்தை ட்விட்டர் வெளியிட்டு இருந்தது. இதற்கு இந்தியாவில் பலர் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.

இதற்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு பதில் அளித்த ட்விட்டர் நிறுவனம் தங்களது தவறை திருத்திக்கொள்வதாக கூறியது. ஆனால் இதுவரை வரைபடத்தை மாற்றவில்லை.

இந்நிலையில், மத்திய அரசின் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து ட்விட்டருக்கு எதிராக ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்தனர். இந்திய வரைபடத்தை தவறாக சுட்டிக்காட்டிய ட்விட்டரை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் இன்று ட்விட்டர்பேண் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்று ஒட்டு மொத்த ட்விட்டர் பயனாளர்கள் கவனித்து வருகின்றனர்.

ஒரு வேளை சீனா மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்த மாதிரி ட்விட்டரையும் தடை செய்தால் இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News