Kathir News
Begin typing your search above and press return to search.

பெங்களூரு கலவரம்: 17 SPDI மற்றும் PFI தலைவர்கள் கைது!

பெங்களூரு கலவரம்: 17 SPDI மற்றும் PFI தலைவர்கள் கைது!

பெங்களூரு கலவரம்: 17 SPDI மற்றும் PFI தலைவர்கள் கைது!

Saffron MomBy : Saffron Mom

  |  22 Dec 2020 11:37 AM GMT

இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 இல், பெங்களூரூவில் பேஸ்புக்கில் நபிகள் நாயகம் குறித்துப் பதிவு செய்ததற்காக முஸ்லீம் கும்பல் நடத்திய கலவரத்தில் பல பொதுச் சொத்துக்களும் மற்றும் காவலர்களும் பாதிப்பு அடைந்தனர். இது தொடர்பாகத் தேசிய புலனாய்வுக் குழு(NIA) விசாரணை நடத்தி வந்தது. இந்த சம்பவம் முன்பே திட்டமிட்டுக் குறித்து வைத்துத் தாக்கப்பட்டதாக தெரிவியவந்த்தது.

மேலும் இந்த கலவரத்துக்குத் தூண்டியதற்கு முக்கிய குற்றவாளியாக SPDI தலைவர் முசாமில் பாஷா என்று NIA குற்றம்சாட்டியது. தற்போது இந்த வன்முறையில் தொடர்புடைய இஸ்லாமிய அமைப்பான SPDI மற்றும் PFI 17 தலைவர்களை NIA கைது செய்துள்ளது.

இது வரை இந்த கலவரம் தொடர்பாக 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் மேலும் விசாரணை நடந்து வருகின்றது என்று NIA தெரிவித்துள்ளது. இந்த கலவரம் நடத்த பிறகு, செப்டெம்பரில் அரசாங்கம் உண்மை கண்டறியும் குழு அமைத்தது. அதன் பின்னர் இது திட்டமிட்டு நடத்தப் பெற்ற கலவரம் என்று கண்டறிந்தது மற்றும் இது குறிப்பாக இந்து மக்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது என்றைக்கும் கண்டறிந்தது.

மேலும் இந்த வன்முறையானது முன்னர் டெல்லி மற்றும் ஸ்வீடெனில் நடைபெற்ற வன்முறையைப் போன்றே இருந்தது. மேலும் இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாக SPDI மற்றும் PFI இருந்தையும் அக்குழு கண்டறிந்தது. பெங்களூரு கலவரம் தொடர்பாக NIA பல இடங்களில் SPDI அதிகாரிகள் நான்கு பேர் வீடு உட்படச் சோதனை நடத்தியது. NIA வெளியிட்ட அறிக்கையின் படி, பெங்களூரூவில் 43 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

இந்த சோதனையின் போது SPDI மற்றும் PFI குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களாகக் கத்தி, இரும்பு கம்பிகள் மற்றும் ஆயுதங்களை NIA பறிமுதல் செய்தது. இந்த கலவரத்தில் 293பேர் தொடர்புடையதாக NIA தெரிவித்தது. அதில் 124 பேர் HJ ஹல்லி காவல்நிலையத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கிலும் மற்றும் 169 பேர் KG ஹல்லி காவல் நிலையம் தொடர்பான வழக்கிலும் கைது செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News