Kathir News
Begin typing your search above and press return to search.

பெங்களூரு கலவரம்: தொடர்புடைய மற்றொரு காங்கிரஸ் தலைவர் ரகீப் ஜாகிர் கைது.!

பெங்களூரு கலவரம்: தொடர்புடைய மற்றொரு காங்கிரஸ் தலைவர் ரகீப் ஜாகிர் கைது.!

பெங்களூரு கலவரம்: தொடர்புடைய மற்றொரு காங்கிரஸ் தலைவர் ரகீப் ஜாகிர் கைது.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  4 Dec 2020 12:00 AM IST

இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 இல் பெங்களூருவில் நடைபெற்ற கலவரத்தில் பல வாகனங்களும் மற்றும் போது சொத்துக்களும் சேதம் அடைந்தது. இதில் காவல்துறையினர் பலரும் காயமடைந்தனர். இந்த கலவரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான காங்கிரஸ் தலைவரும் மற்றும் முன்னாள் கார்போரேட்டருமான ரகீப் ஜாகிர் பெங்களூர் குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அறிக்கையின் படி, ரகீப் ஜாகிர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாகக் குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்திப் பாட்டீல் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் தனது பெயர் பெங்களூரு கலவர வழக்கில் சேர்க்கப்பட்டது தெரிந்து தலைமறைவு அடைந்தார். ஜாகிர் பெங்களூரு கலவரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டாவது கார்போரேட்டர் ஆவார். முன்னர் CCB அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர் R சம்பத் ராஜைக் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஒரே இடத்திலே தலைமறைவாக இருந்தனர். ஆனால் சம்பத் ராஜ் நவம்பர் 17 இல் சரணடைந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே ராஜின் நெருங்கிய உதவியாளர் ரியாசுதீனை மத்திய குற்றப்பிரிவு அமைப்பு கைது செய்தது. பின்னர் அவர் நீதிமன்றது அனுப்பப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தலைமறைவாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு உதவியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

மத்திய குற்றப்பிரிவு அமைப்பு பெங்களூரு கலவரம் தொடர்பாகத் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், ராஜ் தனது கட்சி MLA அகந்தா சீனிவாச மூர்த்தியைத் தாக்க ஜாகீர் மற்றும் SDPI போன்ற இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. CCB தாக்கல் செய்த 850 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகையில் 52 குற்றவாளிகளின் பெயர்கள் இடம்பெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி குற்றவாளிகள் சம்பத் ராஜ் மற்றும் ஜாகீர் ஹுசைன் பெயர் 51 மற்றும் 52வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News