சொமாட்டோ ஊழியரை தாக்கிய பெண் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி.!
பெங்களூர் நகர் பகுதியில் அதிகளவு சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளது. அதில் பெண்கள், ஆண்கள் என பல லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் பெரும்பாலான பேர் ஆன்லைன் வாயிலாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

By : Thangavelu
பெங்களூர் நகர் பகுதியில் அதிகளவு சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளது. அதில் பெண்கள், ஆண்கள் என பல லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் பெரும்பாலான பேர் ஆன்லைன் வாயிலாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
அது போன்று உணவு டெலிவரி செய்ய வரும் நபர்களை சிலர் தரக்குறைவாக நடத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதே போன்று பெங்களூரு பகுதியில் வசிக்கும் ஹிடேஷா சந்திரனி என்ற பெண் கடந்த 9ம் தேதி சொமாட்டோ மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது ஊழியர் காமராஜ் என்பவர் உணவு கொண்டு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பெண் மூக்கில் ரத்தம் வருவது போன்ற வீடியோ வெளியாகியது. அதில் சொமாட்டோ ஊழியர் தன்னை தாக்கியதாக கூறினார்.
இதனையடுத்து அப்பெண் கொடுத்த புகாரில் சொமாட்டோ ஊழியர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் தன்னை அப்பெண் ஏன் தாமதமாக உணவு எடுத்து வந்தாய் என்று கூறி, தன்னை செறுப்பால் தாக்கினார். நான் எவ்வளவோ தடுக்க முயன்றேன். ஆனால் அப்பெண் தன்னை அடித்துக்கொண்டே இருந்தார். நான் தற்காப்புக்காக தள்ளிவிடும்போது அவர் கீழே விழுந்தார். என் மீது எந்த தவறும் இல்லை என கூறினார். மேலும், ஹிடேஷா சந்திரனி என் மீது பொய் புகார் அளித்ததால் எனக்கு வேலைப் போய்விட்டது என கண்ணீர் விட்டார்.
இதனிடையே ஹிடேஷா தன்னை தாக்கியதாக எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் காமராஜ் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ஹிடேஷா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உணவு டெலிவரி செய்யும் நபர்கள் பல கஷ்டங்களுக்கு நடுவில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களிடம் தங்களின் பணக்கார திமிரை காட்டாதீர்கள். அனைவரும் சமமாக நடத்தினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்பது நிதர்சனமாக உண்மை.
