ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம்! ரிசர்வ் வங்கி போட்ட உத்தரவு !
இந்தியா முழுவதும் தற்போது இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இதில் பல்வேறு ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படுவதில்லை என்று ரிசர்வ் வங்கிக்கு பல முறை புகார்கள் சென்றுள்ளது.
By : Thangavelu
ஏடிஎம்., இயந்திரங்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகவும், இந்த நடைமுறை அக்டோபர் 1ம் தேதிக்கு பின்னர் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் தற்போது இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இதில் பல்வேறு ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படுவதில்லை என்று ரிசர்வ் வங்கிக்கு பல முறை புகார்கள் சென்றுள்ளது.
இதனை பரிசீலனை செய்த ரிசர்வ் வங்கி, ஏடிஎம் இயந்திரங்களில் உரிய நேரத்தில் பணம் நிரப்பாமல் உள்ள வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி முதல் 10 மணி நேரத்திற்கு மேல் பணம் இல்லாமல் இருக்கும் ஏடிஎம்மின் வங்கிகளுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இனிமேல் பணம் இல்லாத ஏடிஎம்களில் உடனுக்குடன் பணம் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது.
Source: Dinamalar
Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2820982