Kathir News
Begin typing your search above and press return to search.

மேக்-இன் இந்தியா திட்டத்தின் மற்றொரு மைல்கல்: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம்!

மத்திய அரசின் முன்முயற்சியான மேக்-இன் இந்தியா திட்டங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும்.

மேக்-இன் இந்தியா திட்டத்தின் மற்றொரு மைல்கல்: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 March 2023 12:50 AM GMT

இந்திய விமானப்படைக்கு ரூ 6,800 கோடி செலவில் HAL நிறுவனத்திடமிருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானத்தை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய விமானப்படைக்கு ரூ 6,828.36 கோடி செலவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) நிறுவனத்திடமிருந்து 70 எச்.டி.டி-40 அடிப்படை பயிற்சி விமானத்தை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த விமானம் 6 ஆண்டு காலத்தில் வழங்கப்படும். இந்த விமானம் 56% உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதாகும் இது 60% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் MSMEகள் உட்பட இந்திய தனியார் தொழில் துறையினரை வழங்கல் தொடரில் ஈடுபடுத்த உள்ளது.


இந்த விமானக் கொள்முதல் மூலம் 100-க்கும் அதிகமான MSM-க்களில் 1500 பேர் நேரடியாகவும் 3000 பேர் வரை மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். எச்.டி.டி-40 கொள்முதல் செய்வது இந்திய விண்வெளி பாதுகாப்புக்கு வலுசேர்ப்பதாகவும் தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப் படுவதால் மத்திய அரசின் முன்முயற்சியான தற்சார்பு இந்தியா மற்றும் மேக்-இன் இந்தியா திட்டங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News