Kathir News
Begin typing your search above and press return to search.

கள்ளச்சாராய விவகாரம்.. 9 பேருக்கு தூக்கு தண்டனை.. 4 பேருக்கு ஆயுள்.!

கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயத்தை குடித்து 19 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 14 பேரை பீகார் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கானது கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கள்ளச்சாராய விவகாரம்.. 9 பேருக்கு தூக்கு தண்டனை.. 4 பேருக்கு ஆயுள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2021 12:27 PM IST

கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயத்தை குடித்து 19 பேர் உயிரிழந்தனர்.இந்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 14 பேரை பீகார் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கானது கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் சிறையில் இருந்த ஒருவர் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பீகார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News