Kathir News
Begin typing your search above and press return to search.

மனுஷங்களா நீங்க..? காதலன் "பிக்கி அலி"யோடு சேர்த்து 4 நண்பர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது மைனர் பெண்!

Biki Ali and his 4 friends in Guwahati, case filed after they uploaded video

மனுஷங்களா நீங்க..? காதலன் பிக்கி அலியோடு சேர்த்து  4 நண்பர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது மைனர் பெண்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 March 2022 7:15 AM IST

குவாஹாத்தியில் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ததற்காக, தலைமறைவான பிக்கி அலி, பைசூர் அலி, புனா அலி, பிங்கு அலி, ராஜா அலி ஆகிய 5 இளைஞர்களை கவுகாத்தி போலீஸார் தேடி வருகின்றனர் . குற்றத்தை செய்த பின்னர், பிக்கி அலி தலைமையிலான இளைஞர்கள் கும்பல், வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். அது வைரலாக பரவியது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமி பிக்கி அலியுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 16 ஆம் தேதி , நண்பருடன் சேர்ந்து அவளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் காரணமாக 16 வயது சிறுமி நடந்ததை வெளியில் கூறவில்லை. பிப்ரவரி 19 ஆம் தேதி, சிறுமியை சந்தித்த பிக்கி அலி தன்னுடன் ஓயோ ஹோட்டலுக்கு வருமாறு மிரட்டினார். வர ஒப்புக் கொள்ளாவிட்டால், காட்சிகளை வைரலாக்குவோம் என்று மிரட்டினார் .

அங்கு சென்ற சிறுமியை ஹோட்டல் அறையில் வைத்து , பிக்கி அலியுடன் பைசூர் அலி, புனா அலி, பிங்கு அலி மற்றும் ராஜா அலி ஆகியோர் பலாத்காரம் செய்து, மீண்டும் வீடியோ எடுத்துள்ளனர். இம்முறை அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார், உடனடியாக அவரது பெற்றோர் நகரிலுள்ள பன்பஜார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 5 பேர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேலானவர்கள். குற்றவாளிகள் 5 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News