Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி மற்றும் நாட்டுக்கு கெட்டப்பெயர்.. செய்தி இணையதளத்திற்கு பல கோடி வெளிநாட்டு நிதி.. சதி செயல் அம்பலம்.!

பிரதமர் மோடிக்கும் நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை என்ற பெயரில் இணைய செய்தி தளம் சதியில் ஈடுபட்டுள்ளது எனவும், இதற்கு என்று வெளிநாட்டில் இருந்தும் அதற்காக நிதி கிடைத்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் நாட்டுக்கு கெட்டப்பெயர்.. செய்தி இணையதளத்திற்கு பல கோடி வெளிநாட்டு நிதி.. சதி செயல் அம்பலம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 July 2021 11:04 AM IST

பிரதமர் மோடிக்கும் நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை என்ற பெயரில் இணைய செய்தி தளம் சதியில் ஈடுபட்டுள்ளது எனவும், இதற்கு என்று வெளிநாட்டில் இருந்தும் அதற்காக நிதி கிடைத்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நியூஸ்கிளிக் என்ற ஆங்கிய இணையதள செய்தி நிறுவனத்தின் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சில சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது: நியூஸ்கிளிக் இணைய செய்தி தளத்திற்கு சுமார் 9.59 கோடி ரூபாய் அன்னிய முதலீடாக பெறப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முறைகளில் 28.46 ரூபாய் நிதி பெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடிக்கு எதிராகவும் உலக அளவில் நமது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்ற வகையில் சில சக்திகள் இயங்கி வருகிறது. அது போன்ற நபர்களுக்கும் இந்த இணைய தளத்துக்கும் தொடர்பு உள்ளது.

இதற்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தூண்டுதலால் நமது நாட்டுக்கு இவர்கள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிதியில் மகாராஷ்டிரா மாநிலம், கோரேகானில் வன்முறையை தூண்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள கவுதம் நவால்கா உள்ளிட்ட சிலருக்கு தரப்பட்டுள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே நமது பிரதமருக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும் திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகை என்ற போர்வையில் இந்த செய்தி நிறுவனமும் சதிசெயலில் ஈடுபட்டுள்ளது.

நமது நாட்டில் எதாவது நல்லது செய்தால் அதற்கு எதிராக இந்த செய்தி நிறுவனம் செய்திகளை வெளியிடுவது மற்றும் தடுப்பூசி பற்றியும் தவறான தகவல்களை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News