மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை மீட்டெடுக்க, அசாம் முதலமைச்சரின் அதிரடி திட்டம்!
By : Dhivakar
"அஸ்ஸாம் மாநிலத்தின் நாகரீகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் முற்றிலும் சம்பந்தமே இல்லாத இடங்களின் பெயர்கள் அமைந்துள்ளது இதனை மாற்றி அமைக்க வேண்டும்" என்று அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து இடங்களின் பெயர்கள். முக்கியத்துவம் வாய்ந்ததாக இருத்தல் வேண்டும். அப்பகுதியின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டுதான் ஒரு பகுதியின் பெயர் அமைய வேண்டும். இதை உணர்ந்த அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் அதிரடி முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : பெயர்களில் தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது, கிராமமோ, நகரமோ, மாநகரமோ இவைகளின் பெயர்கள், அப்பகுதியின் கலாச்சாரம் ,பண்பாடு மற்றும் நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும். இதற்காக ஒரு இணையதளம் தொடங்கி, அதில் மக்களின் கருத்துக்களை கேட்க உள்ளோம்"
மேலும் அவர் பேசுகையில் " பல இடங்களில் அப்பகுதி மக்கள் அவ்விடத்தின் பெயர்களை விரும்பவில்லை. ஆகையால் அனைத்தும் மாற்றப்பட வேண்டும்".என்றும் கூறினார்.
அசாம் மாநில முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதேபோல் அனைத்து இந்திய மாநிலங்களிலும் அதன் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரீகத்தின் வெளிப்பாடாக பெயர்கள் மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.