Kathir News
Begin typing your search above and press return to search.

காலிஸ்தானுக்கு பாடம் புகட்டிய மத்திய அரசு: பா.ஜ.க-வால் கிடைத்த சிறந்த அங்கீகாரம்!

இங்கிலாந்தில் அராஜகத்தில் ஈடு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசு சரியான பாடம் கற்பித்து கொண்டிருக்கிறது.

காலிஸ்தானுக்கு பாடம் புகட்டிய மத்திய அரசு: பா.ஜ.க-வால் கிடைத்த சிறந்த அங்கீகாரம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 March 2023 4:02 AM GMT

பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் தற்போது காலிஸ்தான் தனி நாடு வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இந்த ஒரு அமைப்பிற்கு கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளிப்படையான ஆதரவும் குறிப்பாக பாகிஸ்தானின் ISI போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ரகசிய ஆதரவும் கிடைத்து இருக்கிறது. இந்த ஒரு சூழ்நிலையில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பிறகு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முற்றிலும் தடைப்பட்டது. காலிஸ்தான் அமைப்புகளுக்கு ஆதரவாக வாரிசு பஞ்சாப் என்கின்ற அமைப்பை நடிகர் தீப் சிங் தொடங்கி வைத்து செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார்.


இதை எடுத்து மேற்கண்ட அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார் அம்ரித் பால்சிங். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அம்ரித் பால் சிங்யின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். மேலும் கடும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாப் அரசு அவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கைது நடவடிக்கை ஈடுபட்டு, கைது செய்தது. அதனுடைய வகையில் 114 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவரைப் போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள்.


இந்த ஒரு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெளிநாட்டில் குறிப்பாக இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் மீது கற்கள் வீசப்பட்டது, அங்கு இருக்கும் தேசிய கொடிகளை இறக்கி அகற்றி இருந்தார்கள. இதற்கு இந்தியா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருந்தது. மத்திய அரசு நடவடிக்கை மூலமாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பிரம்மாண்டமான தேசிய கொடி பறக்க விடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Mediyaan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News