Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க ஆளும் அசாமில் : அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரிடம் நேரத்தை செலவிட, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான்கு நாட்கள் விடுப்பு !

பா.ஜ.க ஆளும் அசாமில் : அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரிடம் நேரத்தை செலவிட, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான்கு நாட்கள் விடுப்பு !
X

DhivakarBy : Dhivakar

  |  26 Nov 2021 1:21 PM GMT

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களிடம் நேரத்தை செலவிட, நான்கு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது பா.ஜ.க ஆளும் அசாம் மாநில அரசு.

கடந்த புதன்கிழமை அசாம் தலைநகர் கவுஹாத்தியில், அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் கூடியது. கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தில் தங்கள் பெற்றோர்களை காண விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிப்பது.



அசாம் மாநில அரசின்கீழ் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெற்றோர்களிடம், ஊழியர்கள் நேரத்தை செலவிட நான்கு நாட்கள் தாராளமாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர்கள் இல்லாத ஊழியர்கள் தங்கள் மனைவியின் பெற்றோர்களிடம் நேரத்தை செலவிட விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஊழியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தே பணி செய்து வந்தால் அவர்கள் விடுப்பு நாட்களை தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் பெற்றோர்களை காண விருப்பம் இல்லாதவர்களுக்கு இந்த விடுப்பு அனுமதிக்கப்படாது. என்றும் கூறப்பட்டுள்ளது

அமைச்சர்கள், குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் என அனைவரும் இந்த இந்த விடுப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். என்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் நலன் கருதி எடுத்த இந்த முடிவு நாடு முழுவதிலுமுள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

East Mojo

Next Story
கதிர் தொகுப்பு
Trending News